ஆர்யன் கானை விடுவிக்க ஷாருக் கானிடம் ரூ.25 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக சாட்சி ஒருவர் புகார்

0 3448

போதைப்பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க அவரது தந்தையான நடிகர் ஷாருக் கானிடம் 25 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக சாட்சி ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் சிக்கியா வழக்கில் ஆர்யன் உள்ளிட்டோர் கைதாகினார். இவ்வழக்கில் தனியார் புலனாய்வாளர் கே.பி.கோசவி, அவரது உதவியாளர் பிரபாகர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரபாகர், சோதனை நடந்தபோது ஆர்யனை விடுவிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், கோசவியுடன் இணைந்து ஷாருக்கிடம் 25 கோடி ரூபாய் வரை பேரம் நடத்தி இறுதியில் 18 கோடி ரூபாய்க்கு முடித்துக்கொள்ளலாம் என பேசியதாக புகார் கூறினார்.

மேலும், அதில் 8 கோடி ரூபாயை போதை பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடேவுக்கு வழங்கப்பட வேண்டும் என கோசவி வேறொருவரிடம் பேசியதாக பிரபாகர் புகார் கூறியுள்ளார். இத்தகவல்கள்  உண்மைக்கு புறம்பானவை என போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மறுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments