வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு இன்றுமுதல் புதிய வழிகாட்டுதல்கள்
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான புதிய வழிகாட்டுதல்கள் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
அதன்படி உலக நலவாழ்வு அமைப்பால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசி போட்டிருப்பதுடன், கொரோனா இல்லை என்கிற சான்றிதழ் பெற்றிருப்போருக்கு வீட்டுத் தனிமையும் இல்லை, கொரோனா சோதனையும் தேவையில்லை. தடுப்பூசி போடாவிட்டாலோ, ஒரு தவணை மட்டும் தடுப்பூசி போட்டிருந்தாலோ இந்தியாவுக்கு வந்ததும் கொரோனா சோதனைக்கு மாதிரி கொடுப்பதுடன், ஏழு நாட்கள் வீட்டுத் தனிமையில் இருப்பதுடன் எட்டாவது நாள் மீண்டும் ஒருமுறை சோதனை செய்துகொள்ள வேண்டும்.
கொரோனா சோதனை அறிக்கையின் உண்மைத் தன்மை குறித்து உறுதிமொழி அளிக்க வேண்டும், போலியானது எனக் கண்டறியப்பட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
Comments