சேலம்: கல்வராயன் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

0 3029

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன்மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட முட்டல் ஏரி படகு சவாரி ஆணைவாரி நீர் வீழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 25 முதல் திறக்கப்பட்டது. தற்போது, கல்வராயன் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் அதிகளவில் தண்ணீர் வருகிறது.

\இதன் காரணமாக ஆணைவாரி நீர் வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி சூழல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments