நாடு முழுவதும் இதுவரை 102 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது - மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 102 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 77 லட்சத்து 40 ஆயிரம் டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை 102 கோடியே 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பெருந்தொற்றிலிருந்து மீட்கப்பட்டவர்களின் விகிதம் 98 விழுக்காடாக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments