உத்தரப்பிரதேசத்தில் விமானப்படை வீரருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு

0 2698

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாகப் பேசிய கான்பூர் தலைமை மருத்துவ அதிகாரி நேபால் சிங், இந்திய விமானப்படை வீரர் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதையடுத்து அவரது குடியிருப்பு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவருடன் தொடர்புள்ள 22 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments