T20 உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி

0 6263

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்த நிலையில் கேப்டன் கோலி மட்டும் 57 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 79 ரன்னும், கேப்டன் பாபர் அசாம் 68 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். 17புள்ளி 5 ஓவரில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments