ஹாலிவுட் நடிகர் சுட்டதில் உயிரிழந்த பெண் ஒளிப்பதிவாளருக்குத் திரை கலைஞர்கள் அஞ்சலி
அமெரிக்காவில் படப்படிப்பின் போது எதிர்பாராவிதமாக சுட்டு கொல்லப்பட்ட பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ்-க்கு திரைப்பட கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நியூ மெக்சிகோவில் நடைபெற்ற ரஸ்ட் திரைப்பட ஷூட்டிங்-கின் போது ஹாலிவுட் நடிகர் அலெக் பால்ட்வின், படப்படிப்பில் நிஜத் துப்பாக்கிக்கு பதிலாகப் பயன்படுத்தப்படும் பிராப் கன்னால் சுட்டபோது பாய்ந்த தோட்டா ஹலினா-வின் மார்பில் தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு 200 க்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், துணை இயக்குநர் டேவ் ஹால்ஸ் தோட்டா இல்லாததாகக் கூறி கொடுத்த துப்பாக்கியால் அலெக் பால்ட்வின் சுட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரம் முன்னால் ஏராளமான கலைஞர்கள், பாதுகாப்பற்ற பணி சூழலை காரணம் காட்டி படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளிநடப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.
Comments