சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை உரத்தில் ஆபத்தான நுண் உயிரிகள் கலந்திருப்பதாக இலங்கை குற்றச்சாட்டு

0 6150
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை உரத்தில் ஆபத்தான நுண் உயிரிகள் கலந்திருப்பதாக இலங்கை குற்றச்சாட்டு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை உரத்தில் ஆபத்தான நுண் உயிரிகள் இருப்பது கண்டறியப்பட்டதால் அதை அனுமதிக்க இலங்கை அரசு மறுத்துள்ளது.

பெயர் வெளியிடப்படாத கப்பலில் வந்துள்ள இயற்கை உரத்தில் ஆபத்தான நுண் உயிரிகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். உலகின் 100 சதவீத இயற்கை விவசாயம் செய்யும் நாடு என்ற இலங்கை அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக சீனாவுடன் 42 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இயற்கை உரம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவின் Qingdao Seawin Biotech Group நிறுவனத்திடம் இருந்து பெறப்பெட்ட இயற்கை உரத்தை மீண்டும் சீனாவுக்கே திருப்பி அனுப்ப இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments