கடற்பகுதியில் நிகழ்ந்த அரிய நிகழ்வு ; கடல் நீரை மேகங்கள் உறிஞ்சி எடுத்த வீடியோ காட்சிகள் வெளீயீடு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த பாசிப்பட்டினம் பகுதியில் கடல் நீரை மேகங்கள் உறிஞ்சி எடுக்கும் அரிய காட்சியின் வீடியோ வெளியாகியுள்ளது.
பாசிப்பட்டினம் கடற்கரை பகுதியில் நேற்று கனமழை பெய்த நிலையில், மழை பெய்ததற்கு முன்பாக கடற்கரையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இந்த அரிய நிகழ்வு தோன்றி மறைந்ததாக மீனவர்கள் கூறுகின்றனர்.
அதனை மீனவர்கள் வீடியோ பதிவும் செய்த நிலையில் கரையை நோக்கி சுழல் காற்று நகர்ந்ததால் மீன்பிடி வலைகள் சேதமடைந்தன. ஒரே நேரத்தில் கடலில் குளிர்ந்த காற்றும், வெப்பமான காற்றும் வீசுவதால் இது போன்ற சுழல் தோன்றும் எனவும், பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இந்த சுழல் தோன்ற வாய்ப்புள்ளதாகவும் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments