கனமழை எதிரொலி ; 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்

0 4356
கனமழை எதிரொலி ; 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணைக்கு நொடிக்கு 28 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் நூறடியை எட்டியுள்ளது.

2021 ஜனவரி 1 அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியாக இருந்தது. மார்ச் மாதம் நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. ஜூன் மாதத்தில் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டபின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்தது.

கடந்த சில நாட்களாகக் கர்நாடகத்திலும், தமிழகத்திலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் நேற்று அணைக்கு நீர்வரத்து 39 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது.

இன்று நீர்வரத்து 28 ஆயிரத்து 650 கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ள போதிலும் அணையின் நீர்மட்டம் மீண்டும் நூறடியை எட்டியுள்ளது. இதனால் 16 கண் மதகு அருகில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர் தூவிக் காவிரித்தாயை வணங்கினர்.

டெல்டா பாசனத்துக்கு 100 கன அடி நீரும், கிழக்கு மேற்குக் கால்வாய்களில் 550 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments