பொறியியல் மாணவர்களுக்கான துணை கலந்தாய்வு நிறைவு
பொறியியல் மாணவர்களுக்கான துணை கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்னும் 56ஆயிரம் காலி இடங்கள் உள்ளது என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
பொதுக்கலந்தாய்வு, துணைக் கலந்தாய்வு என இரண்டையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 95,069 இடங்கள் நிரம்பியுள்ளன. நடப்பு கல்வியாண்டில் 56,000 பொறியியல் இடங்கள் காலியாக இருப்பதாகவும், இருப்பினும், கடந்த ஆண்டுகளை விட நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
2019-2020-ம் கல்வியாண்டில் 83,396 பேரும், 2020-21-ம் கல்வியாண்டில் 78,682 பேரும் சேர்ந்த நிலையில் நடப்பாண்டில் 95,069 பேர் சேர்ந்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஏழரை சதவீதம் உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 7,876 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
Comments