கண்களை மூடிக் கொண்டு பெண்ணின் தலையில் உள்ள தேங்காயை கூர்மையான கோடாரியால் உடைத்த நபர்!

0 3573

மகாராஷ்டிராவில் கண்ணைக் கட்டிக் கொண்டு கூர்மையான கோடாரியால் பெண்ணின் தலையில் உள்ள தேங்காயை குறி தவறாமல் உடைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

சப்தவேத் என்று பெயரில் அழைக்கப்படும் இந்தக் கலையைக் கற்ற ஒரு குடும்பத்தினரில் 3 பெண்களின் தலை, வயிறு மற்றும் கால்களில் தேங்காயை வைத்து தெருவில் வித்தை காட்டுகிறார் ஒருவர்.

அடுத்த சில நிமிடங்களில் கண்களை முழுவதும் கட்டிக் கொண்டு சிலம்பம் சுழற்றுவது போல கோடாரியைச் சுழற்றி குறி தவறாமல் 3 தேங்காய்களையும் உடைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

கரணம் தப்பினால் மரணம் என்ற இந்த விளையாட்டு இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments