இங்கிலாந்தின் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க விருப்பம்
இங்கிலாந்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ளன.
முதற்கட்டமாக LEVC எனப்படும் லண்டன் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தொழிற்சலை தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் உடன் கூட்டு சேர்ந்து TX எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதேபோல், Polymateria என்ற நிறுவனம் மத்திய அரசு நிறுவனமான சிப்பெட் உடன் இணைந்து புதிய தொழில்நுட்பம் மூலம் மக்கும் பிளாஸ்டிக் கோப்பைகளைத் தயாரிக்க முன்வந்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் 36 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு வர்த்தகத்தை அதிகரிக்க பிரிட்டன் இந்தியா தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
Comments