பாகிஸ்தானும், சீனாவும் காஷ்மீரில் நிழல் யுத்தத்தில் ஈடுபடுகின்றன - பிபின் ராவத்
ஜம்மு காஷ்மீரில் அமைதியைச் சீர்குலைக்க பாகிஸ்தானும், சீனாவும் நிழல் யுத்தத்தில் ஈடுபடுவதாக இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், எப்பொழுதெல்லாம் நிலைமை சீராகி அமைதி நிலவுகிறதோ, அப்போதெல்லாம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவது போன்ற சூழ்நிலையை உருவாக்குவார்கள் என்று சீனாவையும், பாகிஸ்தானையும் சாடினார்.
மேலும் இந்தியாவிடம் போதுமான ஆயுத அமைப்பு இருக்கிறது என்றும், அவசர காலத்தில் ஆயுதங்கள் வாங்குவதற்கு அரசு அனுமதித்துள்ளதாகவும் பிபின் ராவத் குறிப்பிட்டார்.
Comments