ஆர்யன் கானுக்கு எதிராக கூடுதல் ஆதாரங்களைத் திரட்ட போதைப் பொருள் தடுப்பு துறையினர் திட்டம்

0 3103

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு எதிராக கூடுதல் ஆதாரங்களைத் திரட்ட போதைப் பொருள் தடுப்புத்துறை திட்டமிட்டுள்ளது.

நாளை மறுநாள் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன் கானின் ஜாமீன் மனு விசாரணைக்கு வர இருப்பதால், அதற்கு முன்பாக அவருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன. இதன் முதற்கட்டமாக ஆர்யன் கானில் அழிக்கப்பட்ட வாட்ஸ் அப் செய்திகளை மீட்டெடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் ஆர்யன் கானின் வங்கிப் பரிவர்த்தனைகளை சேகரித்து அவர் மொத்தமாக போதைப் பொருள் வாங்கினாரா என விசாரித்து வருவதாக போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆர்யனின் வாட்ஸ் அப் அரட்டைகளில் அவர் போதைப் பொருள் விற்பவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments