மது, போதைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது... காங்கிரஸ் புதிய உறுப்பினர்களுக்கு விதிமுறைகள்!
காங்கிரஸ் கட்சியில் புதிதாகச் சேருபவர்களுக்கு 10 புதிய விதிகள் உறுப்பினர் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி, புதிய உறுப்பினர்களை மது மற்றும் போதைப் பொருள்களை தவிர்க்குமாறும், கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பொது மன்றங்களில் விமர்சிக்கக் கூடாது என உறுதிமொழி அளிக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு உடல் உழைப்பை வழங்கத் தயங்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நவம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நடக்க உள்ளது.
Comments