குழந்தையின் சாயல் தன்னை போல இல்லை என்பதால் கொன்ற தந்தை... ஏரியில் வீசிய கொடூரம்!

0 4079

மனைவிக்கு பிறந்த பெண் குழந்தையின் சாயல் தன்னை போல இல்லை என்று சந்தேகப்பட்டு, குழந்தையின் வாயில் பிளாஸ்டர் ஒட்டி ஏரியில் வீசி கொலை செய்த கொடூர தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டான். 

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண துர்க்கம் நகரை சேர்ந்த மல்லிகார்ஜுனா - சிட்டம்மா தம்பதிக்கு 2 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது.சம்பவத்தன்று குழந்தையை தூக்கிக் கொண்டு 2 பேரும் மருத்துவமனைக்கு சென்றனர் . அப்போது அழுத குழந்தையை நான் தூக்கி வைத்துக் கொள்கிறேன் என்று கூறி வாங்கி சென்ற மல்லிகார்ஜுனா கைக்குழந்தையுடன் மாயமானதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து குழந்தையுடன் சென்ற கணவரை காணவில்லை என்று மனைவி சிட்டம்மா போலீசில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அனந்தபூரில் வைத்து மல்லிகார்ஜுனாவை பிடித்து விசாரித்தனர். மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது மனைவிக்கு பிறந்த குழந்தை தன்னுடைய சாயலிலோ, தன்னுடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் சாயலிலோ இல்லை என்று கூறி மல்லிகார்ஜூனா மனைவி சிட்டம்மாவிடம் மீண்டும் தகராறு செய்வதை தொடர்ந்துள்ளான்.

ஒரு கட்டத்தில் மனரீதியாக குழந்தை தனது சாயலில் இல்லை என்ற முடிவுக்கே வந்துவிட்ட மல்லிகார்ஜூனா குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். சம்பவத்தன்று மருத்துவமனைக்கு கூட்டிச்செல்வது போல நாடகமாடி குழந்தையை தூக்கிச்சென்ற மல்லிகார்ஜூனா, அந்த பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு சென்று குழந்தையின் அழுகுரல் வெளியில் கேட்டு விடக்கூடாது என்பதற்காக வாயில் பிளாஸ்டரை ஒட்டி, குழந்தையை ஏரிக்குள் வீசி கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ஏரிக்குள் இருந்து அந்த பெண் குழந்தையின் சடலத்தை மீட்ட காவல்துறையினர். சந்தேகத்தால் கொடூர கொலையாளியான தந்தை மல்லிகார்ஜூனாவை கைது செய்து செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது போன்ற சந்தேகங்கள் கணவன மனைவிக்கிடையே எப்போதும் எழக்கூடாதவை என்று கூறும் மருத்துவர்கள் ஒரு பெண் குழந்தை ,தந்தையின் சாயலிலோ, தாயின் சாயலிலோ இல்லாமல் இருந்தால் சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கர்ப்பம் தரிக்கும் முன்பாக கணவன் மனைவிக்கு இடையேயான மனநிலை, முன்னார்களின் சாயல் போன்றவை கூட சாயல் மாறக்காரணமாக இருக்கும் என்கின்றனர்.

அதே நேரத்தில் பெரும்பாலான குடும்பங்களில் இன்றளவும் பெண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லை என்றும் அதற்காக கூட இந்த பெண் குழந்தையை கொலை செய்து விட்டு குற்றத்தை நியாப்படுத்த மனைவியின் நடத்தை மீது பழி சுமத்தி இருக்கலாம் என்று மருத்துவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments