உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி - பிரியங்கா காந்தி அறிவிப்பு!

0 2837

உத்தர பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால்  விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுவதுடன், அரசுத் துறைகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக, உத்தர பிரதேச மாநிலம் பர்பாங்கியில் இருந்து 3 பிரச்சார பயணங்களை துவக்கி வைத்த அவர், காங்கிரசுக்கு வாக்களித்தால் கொரோனா கால மின்கட்டணம் ரத்து செய்யப்படுவதுடன், கொரோனாவுக்குப் பலியானவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

ஆட்சிக்கு வந்தால் மாணவிகளுக்கு ஸ்கூட்டி, ஸ்மார்ட் போன் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என பிரியங்கா வாக்குறு அளித்துள்ளார்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments