குறைந்த விலையில் சிமென்ட் வழங்க அரசு நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழ்நாட்டில் மக்களுக்குக் குறைந்த விலையில் சிமென்ட் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அரசின் டான்செம் சிமென்ட் ஒரு மூட்டை 360 ரூபாய் வரை விற்கப்பட்டு வருவதாகவும், தனியார் சிமென்ட் விலையை ஒப்பிடும்போது இது 90 ரூபாய் குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் சிமென்ட் விற்பனையில் டான்செம்மின் பங்கு நடப்பாண்டில் 7 புள்ளி மூன்று ஐந்து விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். டான்செம் நிறுவனம் ஓரிரு வாரங்களில் வலிமை என்ற புதிய பெயரில் சிமென்ட் அறிமுகப்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
டான்செம் நிறுவனம் மாதத்துக்கு 90 ஆயிரம் டன் அரசு சிமென்டை வெளிச்சந்தையில் விற்று வருவதாகவும், மாதத்துக்கு முப்பதாயிரம் டன் வலிமை சிமென்ட் விற்பனை செய்ய உள்ளதாகவும், அதன் மூலம் தமிழ்நாட்டில் சிமென்ட் சில்லறை விற்பனை விலை மேலும் குறையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Comments