புவி வெப்பமடைவதால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் - அமெரிக்க உளவுத்துறை!

0 5962

பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிக்களுக்கு ஆளாகும் 11 நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளதாக  அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் உத்தரகாண்டில் ஏற்பட்ட பெருமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் பின்னணியில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.  அதிக அளவில் கார்பன் வாயுக்கள் வெளியேற்றப்படுவதால் வரும் 2040 ஆம் ஆண்டு வாக்கில் சர்வதேச அளவில் அரசியல் நெருக்கடி ஏற்படுவதுடன், அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம்  வெப்பமயமாதலை தடுக்க, இந்தியா புதுப்பிக்கத்தக்க  மின்சக்திக்கு மாற நடவடிக்கை எடுப்பதை அங்கீகரிப்பதாக அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments