பிரேசில் இளஞ்சிவப்பு நிறத்தில் மிளிர்ந்த மீட்பர் ஏசு சிலை!
மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரேசிலின் மீட்பர் ஏசு சிலை பிங்க் நிறத்தில் மிளிர்ந்தது.
மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே மம்மோகிராம் சோதனை மூலம் கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம், பிரேசிலில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 95 சதவீத பெண்கள் குணமடைந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுவதால் ரியோ டி ஜெனிரோவில் உள்ள 125 அடி உயர் மீட்பர் ஏசு சிலை பிங்க் நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது.
Comments