கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

0 1921

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடு தளர்வுகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். தலைமைச் செயலாளர் இறையன்பு, நலவாழ்வுத்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை உள்ளிட்டவற்றின் செயலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை நவம்பர் முதல் திறக்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்தும், தீபாவளியையொட்டிப் பொது இடங்களில் கூட்டத்தைத் தவிர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. திரையரங்குகளில் 100 சதவீத  இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாகவும், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடத்துவதற்கான தளர்வுகள் அளிக்க  வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments