கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

0 2673

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு முக்கியக் கட்டுமானப் பொருட்களை இன்றியமையாப் பொருட்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கியக் கட்டுமானப் பொருட்களான சிமென்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற பொருட்களை இன்றியமையாப் பொருட்களின் பட்டியலில் கொண்டுவந்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்வோம் எனத் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளதை மேற்கோள் காட்டியுள்ளார்.

ஒரு மூட்டை சிமென்ட் விலை பிற மாநிலங்களில் 380 ரூபாய் வரை உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 480 ரூபாய்க்கு விற்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments