"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்
சென்னை சூளைமேட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததாக, நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சூளைமேடு பெரியார் பாதை மேற்கில், அரசுக்கு சொந்தமான 2500 சதுர அடியை ஆக்கிரமித்து மன்சூர் அலிகானின் வீடு கட்டிருப்பதாக புகார் எழுந்தது.
18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என 2019ஆம் ஆண்டில் தான் தெரியவந்ததால், நிலத்தை தன்னிடம் விற்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மன்சூர் அலிகான் வழக்கு தொடர்ந்திருந்தார்.
2019ஆம் ஆண்டு அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவின் பேரில், மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.
Comments