100 கோடி தடுப்பூசி இலக்கு தாண்டப்பட்டதை அடுத்து, தடுப்பூசி தயாரிப்பாளர்களை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி
100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோசுகள் போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி, தடுப்பூசி தயாரிப்பாளர்களை இன்று மாலை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீரம் இந்தியா, பாரத் பயோடெக், டாக்டர் ரெட்டிஸ், ஸைடஸ் கெடிலா, பயாலஜிகல்-இ, ஜென்னோவா பார்மா மற்றும் பானேசியா பயோடெக் நிறுவன சிஇஓக்களை மோடி சந்தித்து, தடுப்பூசி இலக்கை எட்டியதில் அவர்களின் பங்களிப்புக்கு பாராட்டு தெரிவிப்பார் என கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் ஆகியோரும் இருப்பார்கள் என சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, இது வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளதவர்களுக்கு அதை உடனடியாக செலுத்துவதற்கான வழிமுறைகள் பற்றியும் மோடி விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments