2022 துவக்கத்தில் கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி? - அடார் பூனாவாலா தகவல்
அமெரிக்க மருந்து நிறுவனமான நோவாவேக்ஸ்-ன் தடுப்பூசியை கோவோவேக்ஸ் என்ற பெயரில் தயாரிக்கும் சீரம் இந்தியா, அதற்கு வரும் ஜனவரி மாதம் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசியின் சோதனை முடிவுகளை ரோலிங் பேசிஸ் அடிப்படையில் தாக்கல் செய்துள்ளதாகவும், இறுதி முடிவுகள் விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும் சீரம் இந்தியா சிஇஓ அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி எல்லா விதமான மரபணு மாற்ற கொரோனா வைரசுகளுக்கும் எதிராக 92 சதவிகித பாதுகாப்பை அளிக்கும் என சோதனை முடிவுகள் காட்டுவதாக அவர் கூறினார். கோவோவேக்ஸ் தடுப்பூசியின் முதல் பேட்ச் உற்பத்தி கடந்த புதன்கிழமை துவங்கியதாகவும் அவர் தெரிவித்தார். 2022 ன் துவக்கத்தில் சிறார்களின் பயன்பாட்டுக்காக கோவோவேக்ஸ் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதமே அடார் பூனாவாலா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Comments