இலங்கை ரோந்துப் படகு மோதியதில் உயிரிழந்த தமிழக மீனவர் உடல் இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்

0 2748
இலங்கை ரோந்துப் படகு மோதியதில் உயிரிழந்த தமிழக மீனவர் உடல் இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் படகு மூழ்கி உயிரிழந்த தமிழக மீனவர் உடல் இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினதிலிருந்து கடந்த 18ஆம் தேதி ராஜ்கிரன், சுகந்தன், சேவியர் ஆகிய மூவரும் இரவு யாழ்பாணம் அடுத்த கோவளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் சென்ற படகு மீது இலங்கை ரோந்துப் படகு மோதியதில் மீனவர் ராஜ்கிரண் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

அவரின் உடல் யாழ்ப்பாணத்தில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து காலை சுமார் 7 மணியளவில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரன் உடல் முறையாக இலங்கை கடற்படையினரிடம் தூதரக அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இன்று பிற்பகல் இந்திய அதிகாரிகளிடம் ராஜ்கிரண் உடல் ஒப்படைக்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments