மதுபோதையில் விவிஐபி எஸ்கார்ட் வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த காவலரிடம் போலீசார் விசாரணை
சென்னை அரும்பாக்கத்தில் விஐபி மற்றும் விவிஐபிகளுக்கு பாதுகாப்புக்காக செல்லும் ஜென்ரல் எஸ்கார்ட் வாகனத்தை காவலர் ஒருவர் மது போதையில் விபத்து ஏற்படும் படி அதிவேகமாக ஓட்டி வந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரும்பாக்கம் பகுதியில் இந்த வாகனத்தை சரவணன் என்கின்ற காவலர் மது போதையில் ஓட்டி வந்ததாகவும் அதன் உள்ளே அவருடைய 4 நண்பர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வாகனத்தை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்திய போது சரவணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த காருடன் சரவணனையும் ஏற்றி அரும்பாக்கம் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments