தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் மகன் பிரவின்குமாருக்கு சொந்தமான நகைக் கடையில் லஞ்ச போலீசார் திடீர் சோதனை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் மகன் பிரவின்குமாருக்கு சொந்தமான நகைக் கடையில் லஞ்ச போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
மங்களபுரத்தில் உள்ள நகை கடையில் நேற்றிரவு இரவு 9 மணியில் இருந்து இந்த சோதனை நடைபெற்றது. இதற்கிடையில் மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை முடித்தனர்.
சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் சோதனையை துவக்கிய போலீசார் இரவு 10.25 மணிக்கு முடித்துக் கொண்டனர்.
Comments