தமிழகத்தில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழகத்தில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். காலை 11.30 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளியை ஒட்டி தியேட்டர்களில் 100சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 1200 கீழ் குறைந்துள்ளதால் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்தும், வருகிற தீபாவளி பண்டிகையொட்டிபொது இடங்களில் கூட்டத்தை தவிர்ப்பது குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Comments