சீன எல்லைக்கு அருகே பல்முனை ராக்கெட் லாஞ்சர் அமைப்பை நிலைநிறுத்திய இந்தியா
சீனாவை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் எழும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அசாமில் பினாகா மற்றும் ஸ்மெர்க் பல்முனை ராக்கெட் லாஞ்சர் அமைப்பை இந்திய ராணுவம் நிலைநிறுத்தியுள்ளது.
38 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த பினாகா ராக்கெட் அமைப்பு, துல்லியமாக நீண்ட தூர தாக்குதல் நடத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. 6 லாஞ்சர்களில் இருந்து 72 ராக்கெட்டுகளை 44 வினாடிகளில் ஏவ முடியும் என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஸ்மெர்க் பல்முனை தாக்குதல் நடத்தும் ராக்கெட் அமைப்பு, அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் தூரம் வரையில் உள்ள இலக்கை தாக்கும் திறன்கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments