அறநிலையத்துறை கல்லூரி பணியிடங்களுக்கு இந்துக்களை தான் நியமிக்க முடியும் ; தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

0 9113
அறநிலையத்துறை கல்லூரி பணியிடங்களுக்கு இந்துக்களை தான் நியமிக்க முடியும்

இந்து சமய அறநிலையத்துறை நிதியின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அறநிலையத்துறையின் கீழ் சென்னையில் இயங்கும் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என வெளியிடப்பட்ட அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

இதன் விசாரணையில், தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments