பேரிடர்க் காலத்திலும் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்குவதற்கான திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

0 2503
பேரிடர்க் காலத்திலும் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு

பேரிடர்க் காலத்திலும் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்குவதற்கான அவசரக் கால மாற்றுத் திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா சூழலில் பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களுக்குச் சமைத்த உணவை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இப்போது 9, 10 ஆகிய வகுப்புகளின் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்கப்பட்டு வருவதாகவும், நவம்பர் முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் முட்டையுடன் சத்துணவு வழங்கப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பேரிடர்களின் போதும், மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான அவசர கால மாற்றுத் திட்டங்களை வகுக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments