சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுப்பதை முன்னோடி திட்டமாக கொண்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
நீர்நிலைகளில் மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்புகளும் நடக்காத வகையில் தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அடுத்த சிட்லபாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரிய பொதுநல வழக்க்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தமிழகம் முழுவதுமுள்ள நீர்நிலைகளின் செயற்கை கோள் புகைப்படங்கள், வரைபடங்களை மாவட்ட வாரியாக தொகுத்து தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், எதிர்காலத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படாமல் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுப்பதை முன்னோடி திட்டமாக கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments