கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவருக்கான தேர்தல் ஒத்திவைத்ததை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது

0 2739
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் கைது

கரூரில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினருக்கும் - போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

திடீரென தேர்தலை தள்ளிவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறவே, அதற்கான காரணத்தைக் கேட்டு அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலரின் காரை வழிமறித்து வாக்குவாதம் செய்தனர்.

அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்த போலீசார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments