மதுரையில் துப்பாக்கி முனையில் ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்தவர் கைது
மதுரை அரசரடி பகுதியில் ஆட்டோ ஓட்டுனரை வழிமறித்து, துப்பாக்கியை காட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். பழைய விளாங்குடி பகுதியை சேர்ந்த ஹரிஹரசுதன், பரவை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையிலிருந்து, அரசரடி சந்தைக்கு காய்கறி லோடு இறக்க வந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் கத்தி முனையில், அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து ஹரிஹரசுதன் ஆட்டோவில் உள்ள லீவரை எடுத்து தாக்க முயன்றதாக கூறப்படும் நிலையில், துப்பாக்கியை காட்டி மிரட்டிய அந்த வாலிபர், ஆயிரத்து100 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிசிடிவியை ஆய்வு செய்த போலீசார், வழிபறியில் ஈடுபட்ட பழைய குற்றவாளி சரத்குமாரை கைது செய்து 9 எம்.எம்.பிஸ்டலை பறிமுதல் செய்தனர். அவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என விசாரிக்கப்படுகிறது.
Comments