லா பால்மாவில் எரிமலை கக்கிய சாம்பலால் கடல் சுற்றுச்சூழல் அமைப்பு பாதிப்பு
ஸ்பெயினின் லா பால்மா தீவின் கும்ப்ரே வியஜா எரிமலை கக்கிய சாம்பலால் கடல் சுற்றுச்சூழல் அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
எரிமலையிலிருந்து வெளியேறி கடலில் கலந்த சாம்பல் மற்றும் தீக்குழம்புகள் 400 மீட்டர் ஆழத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்ற மாதம் 19-ஆம் தேதி முதல் வெடிக்கத் தொடங்கி தொடர்ந்து தீப்பிழம்பை வெளியிட்டு வரும் இந்த எரிமலை சுமார் 2 ஆயிரம் கட்டடங்களை அழித்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
Comments