ஆர்யன் கானுடனான போதைப் பொருள் குறித்த உரையாடல் கேலிக்காக பேசியது என விளக்கமளித்த அனன்யா பாண்டே

0 3570

போதை விருந்து வழக்கில் சிக்கிய நடிகை அனன்யா பாண்டேவிடம் 2-வது நாளாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ஆர்யன் கானுடனான போதைப் பொருள் குறித்த உரையாடல் கேலிக்காக பேசியது என அவர் விளக்கமளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுடன், நடிகை அனன்யா பாண்டே வாட்ஸ் ஆப் மூலம் பலமுறை பேசியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவரும் விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கிறார். இந்த நிலையில், நடிகை அனன்யா பாண்டேவிடம் 2ஆவது நாளாக விசாரணை நடத்திய என்.சி.பி. அதிகாரிகள், அவருக்கும் ஆர்யன் கானுக்கும் இடையிலான போதைப் பொருள் குறித்த உரையாடலை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர்.

அதற்கு கேலிக்காக அவ்வாறு பேசியதாகவும், தாமும், ஆர்யன் கானும் நெருங்கிய நண்பர்கள் எனவும், ஒருபோதும் தாம் போதைப் பொருள் உட்கொண்டதில்லை எனவும் அனன்யா பாண்டே கூறியதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments