அரியர் தேர்வெழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக் கூடாது - உயர்நீதிமன்றம்
அரியர் தேர்வை ரத்து செய்த அரசாணையை நடைமுறைப்படுத்தவில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா சூழலில் அரியர் தேர்வுகளை ரத்து செய்ததுடன், தேர்வுக்குக் கட்டணம் செலுத்தியோர் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் உள்ளிட்டோர் தொடுத்த வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரியர் மாணவர்களுக்கு இரு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும், தேர்வு எழுதாமல் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக் கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
Comments