பிளாங்க் காட்ரிட்ஜ் துப்பாக்கியால் நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு
அமெரிக்காவில் நடந்த திரைப்பட படப்பிடிப்பில், நடிகர் அலெக் பால்ட்வின் , படத்தில் பயன்படுத்தும் blank cartridge துப்பாக்கியால் தவறுதலாக சுட்டதில் அப்படத்தின் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார்.
நியூ மெக்ஸிகோவில் 'ரஸ்ட்' என்னும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த இந்த சம்பவத்தில் அப்படத்தின் இயக்குனர் காயமடைந்தார். துப்பாக்கி குண்டு பட்டு ஒளிப்பதிவாளர் ஹலைனா ஹட்சின்ஸ் உயிரிழந்த நிலையில், காயமடைந்த இயக்குனர் ஜோயெல் செளஸா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உண்மையான துப்பாக்கி சுடுதல் போல தத்ரூபமாக காட்சியை அமைக்க, படத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளில் blank cartridge பயன்படுத்தப்படும் நிலையில், cartridge-ல் இருந்து வெளியேறும் குண்டு சில சமயங்களில் ஆளையே கொல்லும் அளவுக்கு ஆபத்தானவை என கூறப்படுகிறது.
Comments