கீழைக் காற்றின் காரணமாக அடுத்த 2 வாரங்களுக்கு தமிழகத்தில் மழைப்பொழிவு - இந்திய வானிலை ஆய்வுத் துறை!

0 2670

வடகிழக்குத் திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக அடுத்த இரு வாரங்களுக்குத் தமிழ்நாடு, கேரள உள்ளிட்ட தெற்குத் தீபகற்பப் பகுதிகளில் மழையின் தீவிரம் இயல்பாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழையின் முன்னறிவிப்பாக இந்த அறிக்கையை இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. அரபிக் கடலில் கேரளத்தை ஒட்டி உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் நகர்வும், தீவிரமுமே கேரளத்தில் கனமழை பெய்ததற்கும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதற்கும் காரணம் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments