பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் தென்னரசின் வீட்டில் சோதனை

0 2505

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் கட்டுமானப் பணி ஒப்பந்தக்காரர் பி.எஸ்.தென்னரசின் வீட்டிலும், அவரின் கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியக் கட்டடத்தைத் தரமாகக் கட்டவில்லை எனப் பிஎஸ்டி நிறுவனம் மீது புகார் எழுந்தது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கோலாரத்தில் உள்ள பிஎஸ்டி உரிமையாளர் தென்னரசின் வீட்டிலும், நல்லிப்பாளையத்தில் உள்ள அலுவலகத்திலும்  லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments