பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து உதவி... பாகிஸ்தானைத் தொடர்ந்து பழுப்பு பட்டியலில் வைத்துள்ளது FATF
பயங்கரவாத செயல்களுக்கு ஊக்குவிப்பதால் பாகிஸ்தான் பழுப்பு பட்டியலில் உள்ளதாக பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்பு அமைப்பான FATF தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மார்கஸ் ப்ளேயர், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் கொய்தா மற்றும் தாலிபான் போன்ற அமைப்பினருக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக அந்த நாட்டை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் மார்கஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைப் போல ஜோர்டான், மாலி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் பழுப்புப் பட்டியலில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
Comments