முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

0 3018

சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

கடந்த 18-ந்தேதியன்று விடுபட்ட சென்னையில் 3 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது. நந்தனத்திலுள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் வீடு மற்றும் ஆயிரம் விளக்கில் விஜயபாஸ்கர் நண்பரான சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான சாஷன் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தில் ரெய்டு நடந்தது.

அண்ணா நகரிலுள்ள விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளர் முருகன் வீட்டிலும் ரெய்டு நடந்தது. சேலத்தில் விஜயபாஸ்கரின் கல்லூரி நண்பரும், தரண் மருத்துவமனை நிர்வாக இயக்குநருமான மருத்துவர் செல்வராஜின் வீடு மற்றும் மருத்துவமனையிலும் சோதனை நடைபெற்றது. இங்கு, முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா? என்ற விபரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்னும் தகவல் தெரிவிக்கவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments