உட்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்தும் கதி சக்தி தேசியப் பெருந்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0 2277
உட்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்தும் கதி சக்தி தேசியப் பெருந்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டின் உட்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்தும் கதி சக்தி தேசியப் பெருந்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நெடுஞ்சாலை அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் உள்ளிட்ட 16 அமைச்சகங்களை உள்ளடக்கிய கதி சக்தி தேசியப் பெருந்திட்டத்தைக் கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

நாட்டின் கடைக்கோடிப் பகுதி வரைக்கும் பல்வகைப் போக்குவரத்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்த நூறு இலட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதனால் பயணியர் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்துக்காகும் செலவும் நேரமும் குறைக்கப்படும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments