போதைப் பொருள் வழக்கில் கைதான மகன் ஆர்யனை சந்தித்தார் ஷாருக்கான்

0 5112
போதைப் பொருள் வழக்கில் கைதான மகன் ஆர்யனை சந்தித்தார் ஷாருக்கான்

போதைப்பொருள் வழக்கில் கைதாகி மும்பை சிறையில் உள்ள ஆர்யன் கானை அவரது தந்தை நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்துப் பேசினார். சொகுசுக்கப்பலில் போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் ஆர்யன்கான் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கு தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மும்பையில் ஷாருக் கானின் இல்லத்திற்கு சென்றனர். வழக்கு குறித்த விவரங்களை கோரச் சென்றதாகவும், சோதனை ஏதும் நடத்தவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் வீட்டில் சோதனையிடப்பட்டதாகவும், லேப்டாப்கள், செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆர்யன் கானுடனான வாட்ஸ்ஆப் உரையாடலின் அடிப்படையில் அனன்யாவிடம் மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே ஆர்யனை வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments