தமிழ்நாடு ஹோட்டல் உணவுகளை ஸ்விக்கி, சொமேட்டோ மூலம் விற்க திட்டம் ; அமைச்சர் மதிவேந்தன்

0 3526
தமிழ்நாடு ஹோட்டல் உணவுகளை ஸ்விக்கி, சொமேட்டோ மூலம் விற்க திட்டம் ; அமைச்சர் மதிவேந்தன்

தமிழக சுற்றுலாத்துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஹோட்டல்களின் உணவுகளை ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை நிறைவேற்றுவது தொடர்பாக சென்னையில் ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுற்றுலாத்துறையின் தங்கும் விடுதிகளை, மேக்மை ட்ரிப், goibibo உள்ளிட்ட ஆன்லைன் பயண நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 300 சுற்றுலாத் தலங்களில் சர்வதேச தரத்துக்கு இணையான வசதிகளை ஏற்படுத்தத் தேவையான பெருந்திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments