மும்பை அருகே பிரிட்டன் கடற்படையினரும், இந்தியக் கடற்படையினரும் கூட்டாகப் போர்ப் பயிற்சி
மும்பை அருகே கடற்பகுதியில் பிரிட்டன் கடற்படையினரும், இந்தியக் கடற்படையினரும் கூட்டாகப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டனர். பிரிட்டிஷ் கடற்படையைச் சேர்ந்த எச்எம்எஸ் குயீன் எலிசபெத் எனப்படும் விமானந்தாங்கிக் கப்பல் கூட்டுப் பயிற்சிக்காக மும்பை அருகே உள்ள கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலின் ஓடுபாதையில் இருந்து எப் 35 ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்கள் சீறிப் பாய்ந்து சென்றன. ஹெலிகாப்டர்களும் கப்பலில் இருந்து புறப்படுவது, கப்பலில் தரையிறங்குவது ஆகிய பயிற்சிகளில் ஈடுபட்டன.
கடற்படைக் கூட்டுப் பயிற்சி இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பில் முதன்மையானது என்றும், இது பாதுகாப்புத் துறை மட்டுமல்லாமல் வணிகம், அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கும் பயனளிக்கும் என்றும் பிரிட்டிஷ் கடற்படை கமோடர் ஸ்டீவ் மூர்ஹவுஸ் தெரிவித்தார்.
Comments