போப் பிரான்சிஸின் தொப்பியை கேட்டு அடம் பிடித்த மாற்றுத்திறனாளி சிறுவன்

0 2830

வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸின் சொற்பொழிவை கேட்க வந்த சிறுவன், அவர் அணிந்திருந்ததைப் போன்ற வெள்ளைத் தொப்பியை அடம் பிடித்து வாங்கினான்.

பாதுகாவலர்களைத் தாண்டி மேடையில் அமர்ந்திருந்த போப் பிரான்சிஸிடம் சென்று கை குலுக்கிய அந்த மாற்றுத்திறனாளி சிறுவன் அவர் முன்னால் நின்று குதிக்கத் தொடங்கினான்.

தொடர்ந்து மேடையை விட்டு இறங்க மறுத்த சிறுவனுக்கு போப்பின் அருகே இருக்கை போடப்பட்டது.

போப் அருகே அமர்ந்த சிறுவன் அவர் அணிந்திருக்கும் வெள்ளைத் தொப்பியைத் தனக்குத் தருமாறு தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்தான். அதே போன்ற வேறொரு தொப்பியை வரவழைத்து அவனுக்கு அளித்த போப்பாண்டவர், ”கேளுங்கள் தரப்படும்” என்ற இறைவார்த்தையை சிறுவன் தத்ரூபமாக கற்பித்து விட்டதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments