நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி ரூ.5லட்சம் பணம் திருட்டு ; போலீசார் விசாரணை

0 2072
நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி ரூ.5லட்சம் பணம் திருட்டு ; போலீசார் விசாரணை

குழந்தையின்மை சிகிச்சைக்காக மனைவியை அழைத்துக் கொண்டு புதுக்கோட்டையில் இருந்து சென்னை வந்த நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி கார் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

அம்மாபட்டினத்தைச் சேர்ந்த அஹம்மது இப்ராஹிம் என்பவர், சிகிச்சைக்காக மனைவியுடன் சென்னைக்கு காரில் வந்திருந்தார். உறவுக்கார நபரான முஹம்மது பாருக் என்பவன் காரை ஓட்டி வந்துள்ளான். இருவரும் சேத்துபட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவரை பார்க்க உள்ளே சென்ற நேரம் பார்த்து, காரில் இருந்த 5லட்சம் ரூபாய் பணத்தோடு, காரை ஓட்டிக் கொண்டு முகமது பாரூக் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

வெளியே வந்து வெகு நேரமாக முகமது பாரூக்குக்கு போன் செய்த தம்பதி, அவனது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததை அடுத்து, பின் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகாரளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments